Home

 



எம் தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்,

ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறக்கு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.

2007ம் ஆண்டு தை மாதம் வரை, இணைய தமிழ் வானொலிகளில் முதல்வனாய் உங்கள் உள்ளம் நாடி வந்த உலக தமிழர் வானொலி தவிர்க்க முடியாத சில காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மீண்டும் வருவோமா என்று எம் தமிழ் உறவுகள் எதிர் பார்த்து தினம் தினம் மின்னஞ்சல்கள் அனுப்பியும், தொலைபேசி facebook மூலமாக தொடர்புகொண்டும் அன்பினையும் ஆதரவினையும் தெரிவித்து வந்திருந்தார்கள்.

9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பரிட்சாத்த ஒலிபரப்பு இப்போது ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட காலமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. எமது இணையத்தளமும் புனரமைக்கப்பட்டு உங்கள் பாவனைக்காய் வர இருக்கிறது.

எங்கள் வருகைக்காய் ஆவலோடு காத்திருந்த எம் தமிழ் உறவுகள் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி எமது நன்றிகளை கூறிக்கொள்கிறோம்.

முற்றிலும் புதிய வானொலி அனுபவத்திற்காய் காத்திருங்கள்.

என்றும் அன்புடன்
கெளதம்